டாடா குழுமத்தின் முதல் செமி கண்டக்டர் சிப் 2026 ல் வெளியாகும்

March 13, 2024

டாடா குழுமம் தைவானை சேர்ந்த பவர்சிப் செமி கண்டக்டர் மேனுஃபாக்சரிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, செமி கண்டக்டர் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. அதன்படி, டாடா நிறுவனத்தின் முதல் செமி கண்டக்டர் சிப் வரும் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தைவான் நிறுவனத்தின் சேர்மன் பிராங்க் ஹுவாங் தெரிவித்துள்ளார். சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் குஜராத்தில் செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 70% […]

டாடா குழுமம் தைவானை சேர்ந்த பவர்சிப் செமி கண்டக்டர் மேனுஃபாக்சரிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, செமி கண்டக்டர் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. அதன்படி, டாடா நிறுவனத்தின் முதல் செமி கண்டக்டர் சிப் வரும் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தைவான் நிறுவனத்தின் சேர்மன் பிராங்க் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் குஜராத்தில் செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 70% நிதியை மானியமாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலையில், 28 நானோ மீட்டர் செமி கண்டக்டர் சிப்புகள் தயாரிக்கப்பட உள்ளன. இரு நிறுவனங்களுக்கிடையிலான கூட்டணி விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பிராங்க் ஹுவாங் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu