டாடா குழுமத்தின் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (TCPL) நிறுவனம் பிஸ்லெரி நிறுவனத்தை 7000 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில், பிஸ்லெரி நிறுவனம் கையகப்படுத்தப்பட்டதாக வந்த தகவல் பொய் என்று நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
மேலும், பிஸ்லெரி நிறுவனத்தை விற்பது குறித்து பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், டாடா குழுமத்துடனும் விற்பனை திட்டம் குறித்த முடிவு பேச்சுவார்த்தை கட்டத்தில் மட்டுமே உள்ளது என திட்டவட்டமாக கூறியுள்ளார். அதே வேளையில், டாடா குழுமம் பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பிஸ்லெரி நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் உள்ளதாக மட்டுமே குறிப்பிட்டு இருந்தது. இரு நிறுவனங்கள் தரப்பிலிருந்தும், நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.