டிஸ்னி நிறுவனத்திடம் உள்ள டாடா பிளே பங்குகளை 1பில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்குகிறது.
டாடா பிளே நிறுவனத்தில் டாடா குழுமத்திற்கு இருக்கும் மொத்த பங்கு பங்களிப்பு 70% ஆக உள்ளது. டெமாசெக் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு இந்த நிலையில் பங்கு பங்களிப்பு உள்ளது. தற்போது, டிஸ்னி நிறுவனத்தின் 29.8% பங்குகளையும் டாடா குழுமம் வாங்குவதால், மொத்த தொலைக்காட்சி தள கட்டுப்பாடும் டாடா குழுமத்தின் வசம் செல்கிறது. மேலும், டிஸ்னியின் பங்குகள் விற்கப்படுவதால், டிஸ்னி நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் இனிமேல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.














