டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2 புதிய எஸ்யூவி ரக வாகனங்களை வெளியிட்டுள்ளது. டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆகிய வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.எஸ்யூவி வாகனப் பிரிவில், இந்தியாவில் அதிக முன்னேற்றம் காணப்படுகிறது. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவு வாகனங்கள் கவனம் பெற்றுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா ஹேரியர் வாகனம் 15.49 லட்சம் ரூபாய்க்கும், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வாகனம் 16.19 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வாகனங்கள், ஏற்கனவே சந்தையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ என், எக்ஸ்யூவி 700, எம் ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸர் வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.