தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் 9000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 9000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தூத்துக்குடியில் முதலமைச்சரும் மு.க ஸ்டாலின் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக தற்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.