இந்தியாவில், வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ் 6 வாகன கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இன்று பிஎஸ் 6 தர கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பல்வேறு பயணிகள் வாகனங்களை வெளியிட்டுள்ளது. மேலும், தனது வாகனங்களுக்கான வழக்கமான வாரண்டி காலத்தை 2 வருடத்தில் இருந்து 3 வருடமாக உயர்த்தியுள்ளது. மேலும், கிலோமீட்டர் வரைமுறையை 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளது,
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ், பன்ச் ரக வாகனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் லோ கியரிலும் ஸ்மூத்தாக செல்லும்படி மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவற்றின் மைலேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆல்ட்ரோஸ், நெக்சான் ரக வாகனங்களின் டீசல் இன்ஜின்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டியாகோ மற்றும் டைகர் ரக வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.