டாடா மோட்டார்ஸ் மின்சார வாகன விற்பனை 66% உயர்வு

June 2, 2023

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மே மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 73448 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 74755 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த விற்பனையில் சற்று சரிவு காணப்பட்டாலும், மின்சார வாகன விற்பனையில் 66% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும், 5805 என்ற எண்ணிக்கையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மே மாத விற்பனையை உள்ளடக்கி, டாடா […]

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மே மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 73448 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 74755 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த விற்பனையில் சற்று சரிவு காணப்பட்டாலும், மின்சார வாகன விற்பனையில் 66% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும், 5805 என்ற எண்ணிக்கையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மே மாத விற்பனையை உள்ளடக்கி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 6% உயர்ந்து, 45984 ஆக உள்ளது. அதே வேளையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கனரக சரக்கு வாகன விற்பனை 11% உயர்ந்து 8160 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலகு ரக மற்றும் நடுத்தர சரக்கு வாகன விற்பனை 38% சரிவடைந்து, 3450 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், உள்நாட்டு சரக்கு வாகன விற்பனை 12% சரிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu