மின்சார வாகனத்துறையில் பங்கு விற்பனை மூலம் 1 பில்லியன் டாலர்கள் - டாடா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை

February 23, 2023

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகன வர்த்தகத்தின் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக பெரு நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சுமார் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் பேச்சு வார்த்தை நடத்தும் முக்கிய நிறுவனங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி மற்றும் […]

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகன வர்த்தகத்தின் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக பெரு நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சுமார் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் பேச்சு வார்த்தை நடத்தும் முக்கிய நிறுவனங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி மற்றும் முபாதலா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன், சவுதி அரேபியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொது முதலீட்டு நிறுவனம், சிங்கப்பூரின் டெமாசெக் ஹோல்டிங்ஸ், கேகேஆர், ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. டாடா மோட்டார்ஸின் பங்கு விற்பனை குறித்த எந்தவித தகவலும் மேற்குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu