டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 3783 கோடி

November 3, 2023

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 3783 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையில் நல்ல முன்னேற்றம் பதிவான காரணத்தால், லாபத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 காலாண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமான லாபத்தை பதிவு செய்து வருகிறது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், முந்தைய ஆண்டை விட 3 மடங்கு […]

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 3783 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையில் நல்ல முன்னேற்றம் பதிவான காரணத்தால், லாபத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 காலாண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமான லாபத்தை பதிவு செய்து வருகிறது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், முந்தைய ஆண்டை விட 3 மடங்கு லாபம் பதிவாகியுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் வருவாய் 105128 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 6.9 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 30% உயர்வாகும். இனி வரும் காலாண்டுகளிலும் நல்ல முன்னேற்றத்தை எதிர்நோக்குவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu