டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 46% உயர்வை பதிவு செய்துள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி அதிக அளவிலான லாபம் மற்றும் வருவாய் பதிவாகி உள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17529 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 1.4 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2024ஆம் நிதி ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் 7.88 லட்சம் கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதி ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனையில் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.2 மில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி விற்பனை பதிவாகியுள்ளது. குறிப்பாக, எஸ்யூவி ரக வாகன விற்பனையில் அதிக உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.