கடந்த டிசம்பர் மாதத்தில், உள்நாட்டு வாகன விற்பனையில், வருடாந்திர அடிப்படையில், 10% வளர்ச்சி பதிவாகியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், 72997 வாகனங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், பயணிகள் வாகனங்கள் 40043 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, வருடாந்திர அடிப்படையில் 13.4% உயர்வாகும். மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, ஏற்றுமதி எண்ணிக்கையையும் உள்ளடக்கி, 64.2% உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்தம் 3868 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதே வேளையில், வணிகப் பயன்பாட்டிற்கான சரக்கு வாகன விற்பனையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 33949 சரக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சைலேஷ் சந்திரா, "கடந்த 2022 ஆம் ஆண்டு, டாடா மோட்டார்ஸ்க்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அணைந்து. நாங்கள், 5 லட்சம் விற்பனை இலக்கை எட்டி, இந்த வருடத்தில் 526798 வாகனங்களை விற்பனை செய்துள்ளோம்" என்று கூறினார்.