டாடா நெக்ஸான் மின்சார கார் விலைகள் குறைப்பு

January 19, 2023

2023 ஆம் ஆண்டில் மின்சார வாகனச் சந்தை மிகவும் வளர்ச்சி அடைய உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதனால், சந்தையில் முன்னணி நிலையை தக்க வைக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா நெக்ஸான் மின்சார கார் விலையை குறைத்து அறிவித்துள்ளது. டாடா நெக்ஸான் மின்சார காரின் ஆரம்ப விலை 14.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போதைய நிலையில், பல்வேறு மென்பொருள் மேம்படுத்துதல்கள் மின்சார காரில் புகுத்தப்பட்டுள்ளன. எனவே, டாடா […]

2023 ஆம் ஆண்டில் மின்சார வாகனச் சந்தை மிகவும் வளர்ச்சி அடைய உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதனால், சந்தையில் முன்னணி நிலையை தக்க வைக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா நெக்ஸான் மின்சார கார் விலையை குறைத்து அறிவித்துள்ளது.

டாடா நெக்ஸான் மின்சார காரின் ஆரம்ப விலை 14.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போதைய நிலையில், பல்வேறு மென்பொருள் மேம்படுத்துதல்கள் மின்சார காரில் புகுத்தப்பட்டுள்ளன. எனவே, டாடா நெக்ஸான் மேக்ஸ் மின்சார காரின் விலை 16.49 லட்சத்தில் இருந்து 18.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல், புதிய மென்பொருள் மேம்படுதல் ஏற்கனவே உள்ள டாடா நெக்ஸானில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைவர் விவேக் ஸ்ரீவத்சா, "டாடா நெக்ஸான் காரை, ஒரு முறை சார்ஜ் செய்தால், 437 கிலோமீட்டர் வரை தற்போது பயணிக்கிறது. அதனை 453 கிலோமீட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் மாதம் முதல் டாடா நெக்ஸான் மேக்ஸ் XM மின்சார காரின் வினியோகம் தொடங்கப்படுகிறது" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu