டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. மேலும், ஓராண்டில் 115% உயர்வை பதிவு செய்துள்ளன. கடந்த மார்ச் 28ஆம் தேதி, டாடா மோட்டார்ஸ் ஒரு பங்கு 400.4 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த நவம்பரில் 12%, டிசம்பரில் 11%, ஜனவரியில் 10% அளவில் டாடா மோட்டார்ஸ் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளின் போது, டாடா மோட்டார்ஸ் பங்கு மதிப்பு 5% அளவில் உயர்ந்துள்ளது. ஒரு வருட உச்சமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 886.3 ரூபாயாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் மதிப்புமிக்க வாகன நிறுவனமாக மாறி உள்ளது. மாருதி சுசுகியை முந்திக்கொண்டு டாடா மோட்டார்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.