டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகனங்களுக்கான விலைகளை கிட்டத்தட்ட 1.2 லட்சம் வரை குறைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மின்சார வாகனம் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த வாகனத்தின் விலை குறைக்கப்பட்டு, 14.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மின்சார வாகனமான டியாகோ வாகனத்தின் விலை 70000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாடா டியாகோ 7.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாடா பஞ்ச் மின்சார வாகனத்தின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.