டாடா மோட்டார்ஸ் - ஊபர் நிறுவனத்திற்கு 25000 மின்சார வாகனங்கள் விநியோகம்

February 20, 2023

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஊபர் நிறுவனம் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஊபர் நிறுவனத்திற்கு 25000 எக்ஸ்பிரஸ் டி (XPRES-T) வகை மின்சார வாகனங்களை விநியோகம் செய்ய உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் வரலாற்றில், பசுமை போக்குவரத்து துறையில், மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு கட்டங்களில், படிப்படியாக, இந்த வாகனங்களை விநியோகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மின்சார வாகனங்கள், டெல்லி என் […]

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஊபர் நிறுவனம் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஊபர் நிறுவனத்திற்கு 25000 எக்ஸ்பிரஸ் டி (XPRES-T) வகை மின்சார வாகனங்களை விநியோகம் செய்ய உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் வரலாற்றில், பசுமை போக்குவரத்து துறையில், மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு கட்டங்களில், படிப்படியாக, இந்த வாகனங்களை விநியோகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மின்சார வாகனங்கள், டெல்லி என் சி ஆர், மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விநியோகிக்கப்படும் எக்ஸ்பிரஸ் டி வகை வாகனங்கள், ‘செடன்’ வகையைச் சேர்ந்ததாகும். இதன் விலை 13.04 லட்சமாகச் சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu