டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி நிறுவனத்தின் லாபத்தில் இரட்டிப்பு மடங்கு உயர்வு பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 70.25 பில்லியன் ரூபாய் ஆக சொல்லப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.2% அளவில் உயர்ந்துள்ளன. மேலும், கடந்த காலாண்டில் 24% அளவில் பங்கு மதிப்பு உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் பிரிவில் அதிக முன்னேற்றம் பதிவாகி உள்ளது.