வரும் 2025 ஆம் ஆண்டில், டாடா குழுமத்தால் இயக்கப்படும் இணைய வழி மளிகைப் பொருள் விற்பனைத் தளமான பிக் பாஸ்கெட், பொது பங்கீட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இணைய வழி மளிகை தளமான பிக் பாஸ்கெட்டின் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்நிலையில், பொது பங்கீட்டுக்கு வருவதன் மூலம், 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 64.3% பங்குகள் ‘டாடா டிஜிட்டல்’ வசம் உள்ளன. இந்நிலையில், பொது பங்கீட்டு அறிவிப்பை இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விபுல் பாரேக் அறிவித்துள்ளார். அத்துடன், இந்த நிறுவனம் தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.