டாடா பவர், 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மகாராஷ்டிராவில் அமைக்கிறது

September 9, 2022

மகாராஷ்டிராவில் விராஜ் ப்ரொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற எஃகு உற்பத்தி ஆலை உள்ளது. இந்த நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க டாடா பவர் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம், 200 மில்லியன் யூனிட்டுகள் எரிசக்தி உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 170.43 மில்லியன் கிலோ கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023 ஜூலை […]

மகாராஷ்டிராவில் விராஜ் ப்ரொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற எஃகு உற்பத்தி ஆலை உள்ளது. இந்த நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க டாடா பவர் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம், 200 மில்லியன் யூனிட்டுகள் எரிசக்தி உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 170.43 மில்லியன் கிலோ கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2023 ஜூலை மாதம் முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விராஜ் நிறுவனத்தின் எரிபொருள் சார்பு நிலை 50 சதவீதம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி அமைப்பதற்கு 4.5 கோடி ரூபாய் செலவாகும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனினும், இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு குறித்து டாடா நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த திட்டத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், 74% டாடா நிறுவனத்திற்கும், 26% விராஜ் நிறுவனத்திற்கும் சொந்தமாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம், விராஜ் நிறுவனத்தின் இயக்கத்திற்கான, மாதாந்திர மின்சாரத் தேவையில் 50% பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய டாடா பவர் நிறுவனத்தின் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை தலைவர் ஆஷிஷ் கண்ணா, “இந்த திட்டத்தின் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும், இந்தத் திட்டம் டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையின் அடுத்த படி நிலையாகும்” என்று கூறியுள்ளார். விராஜ் ப்ரொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜேபி கார்க் கூறுகையில், “இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்ட பின்னர், இந்தியாவில், சூரிய மின் உற்பத்தி மூலம் இயங்கும் எஃகு உற்பத்தி ஆலைகளில் விராஜ் முதன்மையானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu