அணு மின் உற்பத்தியில் கால் பதிக்கும் டாடா

February 6, 2025

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், அணுசக்தி தொடர்பான முக்கிய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு தொடர்ந்து, தொழில்துறையின் முக்கிய குழுமமான டாடா, அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீர் சின்ஹா, சிறிய மாடுலர் அணுஉலைகள் அமைப்பதற்கான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிறிய மாடுலர் அணுஉலைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான செயல்முறை கடுமையானதாகும். பொதுவாக ஒப்புதல் பெற 24 மாதங்கள் ஆகும், அதன்பிறகு, கட்டுமான […]

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், அணுசக்தி தொடர்பான முக்கிய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு தொடர்ந்து, தொழில்துறையின் முக்கிய குழுமமான டாடா, அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீர் சின்ஹா, சிறிய மாடுலர் அணுஉலைகள் அமைப்பதற்கான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிறிய மாடுலர் அணுஉலைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான செயல்முறை கடுமையானதாகும். பொதுவாக ஒப்புதல் பெற 24 மாதங்கள் ஆகும், அதன்பிறகு, கட்டுமான பணிக்கு கூடுதலாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

இந்தியா தற்போது 8 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி திறனைக் கொண்டுள்ள நிலையில், 2032ம் ஆண்டுக்குள் இதனை 20 ஜிகாவாட்டாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் டாடாவின் இந்த அறிவிப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu