வேகன் ஆரை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனமானது டாடா பஞ்ச்

August 22, 2024

டாடா மோட்டார்ஸின் பஞ்ச் வாகனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவின் அதிக விற்பனையாகும் காராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 1,26,000க்கும் மேற்பட்ட டாடா பஞ்ச் விற்பனையாகி உள்ளன. அதன்படி, மாருதி சுசுகியின் வேகன் ஆரை முந்தியது. எனினும், ஜூலை மாத வாகன விற்பனையில், ஹூண்டாய் கிரெட்டா முதலிடம் பிடித்துள்ளது. டாடா பஞ்ச் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. டாடா பஞ்ச் வாகனத்தின் வெற்றியானது மாற்று எரிபொருளுக்கான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. […]

டாடா மோட்டார்ஸின் பஞ்ச் வாகனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவின் அதிக விற்பனையாகும் காராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 1,26,000க்கும் மேற்பட்ட டாடா பஞ்ச் விற்பனையாகி உள்ளன. அதன்படி, மாருதி சுசுகியின் வேகன் ஆரை முந்தியது. எனினும், ஜூலை மாத வாகன விற்பனையில், ஹூண்டாய் கிரெட்டா முதலிடம் பிடித்துள்ளது. டாடா பஞ்ச் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.

டாடா பஞ்ச் வாகனத்தின் வெற்றியானது மாற்று எரிபொருளுக்கான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், டாடா பஞ்ச் வாகன விற்பனையில் 47% மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வகைகளில் பதிவாகியுள்ளது. இதே கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில், மாருதியின் சிஎன்ஜி வேகன்ஆர் வாகன விற்பனை 45% என்ற அளவில் உள்ளது. அத்துடன், டாடா பஞ்ச் வாகனம், 4 லட்சம் விற்பனையை எட்டிய மிக வேகமான எஸ்யூவி ஆகவும் வரலாறு படைத்துள்ளது. மேலும், பிற வாகன நிறுவனங்களை எரிபொருள் பன்முகத்தன்மை நோக்கி நகர்த்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu