ஹால்டிராம் நிறுவனத்தை கையகப்படுத்தும் டாடா - 10 பில்லியன் டாலர் கேட்கப்படுவதால் இழு

September 6, 2023

உணவுப் பொருள் வர்த்தகத்தில், இந்தியாவின் பிரபல நிறுவனமாக ஹால்டிராம் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 51% ஹால்டிராம் பங்குகளை டாடா பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, 10 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என ஹால்டிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தத் தொகை அதிகமாக கருதப்படுவதால், டாடா குழுமம் கையகப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், ரிலையன்ஸ், பெப்சி […]

உணவுப் பொருள் வர்த்தகத்தில், இந்தியாவின் பிரபல நிறுவனமாக ஹால்டிராம் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 51% ஹால்டிராம் பங்குகளை டாடா பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, 10 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என ஹால்டிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தத் தொகை அதிகமாக கருதப்படுவதால், டாடா குழுமம் கையகப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், ரிலையன்ஸ், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக, டாடாவின் சில்லறை வணிகப் பிரிவு களமிறங்கும் என கூறப்படுகிறது.

டாடா குழுமம், ஹால்டிராமை கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பெயின் கேப்பிட்டல் நிறுவனத்திடம் ஹால்டிராமை விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 10% பங்குகளை ஹால்டிராம் பெயின் கேப்பிட்டல் நிறுவனத்திடம் விற்கலாம் என கருதப்படுகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu