டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள 5% பங்குகளை விற்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது. ஐ பி ஓ வெளியிடுவதன் மூலம் இந்த பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தை பொது பங்கிட்டுக்கு வெளியிடுவதன் மூலம் கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் ஐ பி ஓ வின் மொத்த மதிப்பு 11 ட்ரில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என கோட்டக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது. வரும் 2025 செப்டம்பர் மாதத்தில், இது பங்குச் சந்தைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் இது மிகப் பெரிய ஐபிஓ வெளியீடாக இருக்கும். முன்னதாக, கடந்த மே மாதத்தில், 21000 கோடி ரூபாய் மதிப்பில் வெளியான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மிகப்பெரியதாக உள்ளது. டாடா சன்ஸ் தவிர, டாடா குழுமத்தை சேர்ந்த வேறு 4 நிறுவனங்கள் விரைவில் ஐ பி ஓ வெளியிட உள்ளதாக கோட்டக் செக்யூரிட்டிஸ் கூறியுள்ளது.