டாடா ஸ்டீல் நிகர லாபம் 84% சரிவு

கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 84% சரிந்துள்ளது. 2023 ஆம் நிதி ஆண்டின் இறுதியில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 1566.24 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டில், 9835 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருமானம் 63131.08 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2022 ஆம் […]

கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 84% சரிந்துள்ளது. 2023 ஆம் நிதி ஆண்டின் இறுதியில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 1566.24 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டில், 9835 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருமானம் 63131.08 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2022 ஆம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில், 69615.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2022-ம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் 57635.79 கோடியாக பதிவான நிலையில், தற்போது இது 59918.15 கோடியாக உயர்ந்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம், பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu