ஒழுங்குமுறைகள் மீறல் - 38 ஊழியர்களை நீக்கிய டாடா ஸ்டீல்

July 6, 2023

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம், 38 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அவர்கள் நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 38 பேரில், 3 பேர் பாலியல் ரீதியிலான தவறான நடத்தைக்காக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் நிறுவனத்தின் இறையாண்மைக்கு எதிராக, ஏற்கத் தகாத செயல்களை […]

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம், 38 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அவர்கள் நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 38 பேரில், 3 பேர் பாலியல் ரீதியிலான தவறான நடத்தைக்காக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் நிறுவனத்தின் இறையாண்மைக்கு எதிராக, ஏற்கத் தகாத செயல்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தில், இதுபோன்ற பணி நீக்கம் நடைபெற்றது. நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை பின்பற்றாத பலர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் விதிமுறைகளை பின்பற்றாதோர் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu