டாடா சன்ஸ் ஐபிஓ ரத்து எதிரொலி - டாடா குழும பங்குகள் 10% சரிவு

March 11, 2024

இன்றைய வர்த்தக நாளில் டாடா குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10% வரை சரிவை சந்தித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாடா சன்ஸ் ஐ பி ஓ வெளியிட உள்ளதாக செய்தி வெளியானது. அப்படி வெளியே வெளியிடப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. இதனால், டாடா குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 36% உயர்ந்தன. ஆனால், தற்போது, ஐபிஓ வெளியிடுவதற்கு டாடா குழுமம் தயாராக இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதன் […]

இன்றைய வர்த்தக நாளில் டாடா குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10% வரை சரிவை சந்தித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டாடா சன்ஸ் ஐ பி ஓ வெளியிட உள்ளதாக செய்தி வெளியானது. அப்படி வெளியே வெளியிடப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. இதனால், டாடா குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 36% உயர்ந்தன. ஆனால், தற்போது, ஐபிஓ வெளியிடுவதற்கு டாடா குழுமம் தயாராக இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாடா குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 10% வரையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் 5%, டாடா டெக்னாலஜிஸ், டாடா கன்ஸ்யூமர் - 3% , டாடா ஸ்டீல், டாடா பவர் - 1% , இந்தியன் ஹோட்டல்ஸ் 1% , டாடா மோட்டார்ஸ் 0.5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu