பூமியில் இருந்து 19 மில்லியன் மைல்கள் தொலைவுக்கு அப்பால், வீடியோ ஒன்றை நாசா அனுப்பியுள்ளது. பூமிக்கு வெளியே நெடுந்தூர தொலைத்தொடர்பு துல்லியமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் பொருட்டு இந்த வீடியோவை நாசா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, எதிர்காலத்தில், விண்கலங்கள் நெடுந்தூரங்களுக்கு அனுப்பப்படும் போது, பூமியிலிருந்து தெளிவான தொலைதொடர்பு இணைப்புகளை ஏற்படுத்த முடியும் என நாசா கூறியுள்ளது.
“தொலைவுகளால் மனிதர்களின் சாதனைகளுக்கு தடங்கல் ஏற்படுத்த முடியாது. எவ்வளவு தொலைவாக இருந்தாலும், தொலைதொடர்பு இணைப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இந்த வீடியோ அனுப்பப்பட்டது. அதனால், இது சாதாரணமாக இணையத்தில் காணப்படும் சிரிப்பு பூனை வீடியோ அல்ல. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தில் விண்வெளியில் பயணிக்கும் வீரர்களுடன் வீடியோ கால் இணைப்புகளை ஏற்படுத்தி தரும் தொழில்நுட்பத்துக்கான ஆரம்பப்புள்ளி” என கூறியுள்ளது.














