சர்வதேச பிராண்ட் ஆலோசனை நிறுவனமான இன்டர்பிராண்ட், ‘இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், டாடா குழுமத்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 50 பிராண்டுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் நிறுவனம் 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 65320 கோடியும், இன்போசிஸ் 53323 கோடியும் மதிப்பு பெற்றுள்ளன. இந்த பட்டியலில், எச்டிஎப்சி நான்காம் இடத்திலும், ஜியோ ஐந்தாம் இடத்திலும் உள்ளன. மேலும், ஏர்டெல், எல்ஐசி, மஹிந்திரா, எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ ஆகிய பிராண்டுகள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், முதல் 5 இடங்களில் 3 இடங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், முதல் 10 பிராண்டுகளின் மொத்த மதிப்பு 4.9 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், மீதமுள்ள 40 பிராண்டுகளின் கூட்டு மதிப்பு 3.3 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.