டிசிஎஸ் - மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் இடையே 1 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

March 8, 2023

டிசிஎஸ் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் வாரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது. மேலும், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்துடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க உள்ளதாகவும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, 5 ஆண்டுகளுக்குப் […]

டிசிஎஸ் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் வாரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது. மேலும், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்துடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க உள்ளதாகவும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, 5 ஆண்டுகளுக்குப் பின்னர், இது மீண்டும் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை, கூடுதல் ஒப்பந்தங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர வேறு சில நிறுவனங்களின் முக்கிய ஒப்பந்தங்களையும், நடப்பாண்டில் டிசிஎஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu