டிசிஎஸ் பங்குகளை விற்கும் டாடா சன்ஸ் - பங்கு மதிப்பு 3% சரிவு

March 19, 2024

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இருந்து பங்குகளை விற்பதன் மூலம் 1 பில்லியன் டாலர்கள் நிதி திரட்ட டாடா சன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதிலிருந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இடையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% வீழ்ச்சியடைந்து ஒரு பங்கு 4152.5 ரூபாய் க்கு வர்த்தகமானது. டாடா சன்ஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தில் உள்ள தனது 0.65% பங்குகளை விற்க உள்ளது. இது கிட்டத்தட்ட […]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இருந்து பங்குகளை விற்பதன் மூலம் 1 பில்லியன் டாலர்கள் நிதி திரட்ட டாடா சன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதிலிருந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இடையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% வீழ்ச்சியடைந்து ஒரு பங்கு 4152.5 ரூபாய் க்கு வர்த்தகமானது.

டாடா சன்ஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தில் உள்ள தனது 0.65% பங்குகளை விற்க உள்ளது. இது கிட்டத்தட்ட 23.4 மில்லியன் பங்குகளை விற்பது போல் ஆகும். இந்த விற்பனையின் மூலம், 9362.3 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது, ஒரு பங்கு 4001 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது சந்தை நிலவரத்தை விட 3.65% குறைவாகும். இந்த பங்கு விற்பனைக்கு பிறகு, டி சி எஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு இருக்கும் பங்கு மதிப்பு 71.7% ஆக இருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu