அழுத்தம் தரும் கல்வித் திட்டத்தை எதிர்த்து தென் கொரிய ஆசிரியர்கள் மிகப்பெரிய போராட்டம்

September 5, 2023

இந்தியாவில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இன்று, தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கொரியாவில் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி திட்டம் மிகவும் அழுத்தம் தருவதாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அழுத்தம் காரணமாக, அண்மையில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றோர்களால் மிரட்டப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். தென்கொரியாவின் கல்வி அமைச்சகம், […]

இந்தியாவில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இன்று, தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்கொரியாவில் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி திட்டம் மிகவும் அழுத்தம் தருவதாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அழுத்தம் காரணமாக, அண்மையில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றோர்களால் மிரட்டப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

தென்கொரியாவின் கல்வி அமைச்சகம், ஆசிரியர் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்து வருகிறது. இதன் விளைவாகவே ஆசிரியர் போராட்டம் தொடங்கினாலும், பொதுப்படையான பல குற்றச்சாட்டுகளையும் ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 50000 ஆசிரியர்கள் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu