உயர்கல்விகள் தாய் மொழியில் கற்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறினார்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 33வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள கல்விக் கொள்கை மிகவும் சிறப்பாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை சொல்லக்கூடிய வகைகளை பின்பற்றியும் வருகிறது என்றார்.
உயர்கல்விகள் தாய் மொழியில் கற்பது மிகவும் சிறப்பான செயல். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசின் கல்விக் கொள்கை சிறப்பாக இருந்தால் அதை மத்திய அரசு கல்விக் கொள்கை வரவேற்கின்றது. எது சிறப்பாக இருக்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர், கோவை மாவட்டத்தில் மத்திய கல்வி நிறுவனங்கள் ஏதேனும் துவங்கவது பற்றி, மாநில அரசு முதலில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்பு அமைக்க முடியும். இதுவரை தமிழக மாநில அரசு எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.