டெக் மஹிந்திரா லாபம் 26% சரிவு

April 28, 2023

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது காலாண்டு லாபம் 26% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியானது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 27% சரிந்து, 1179.8 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிகர லாபம் 5137.6 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த […]

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது காலாண்டு லாபம் 26% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியானது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 27% சரிந்து, 1179.8 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிகர லாபம் 5137.6 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு 12436.1 கோடியாக பதிவான நிலையில், இந்த வருடம் 14023.7 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செலவினங்கள் 12493.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில் 10567.3 கோடி அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நிறுவனங்கள், டெக் மஹிந்திராவில் பங்கேற்பதை குறைத்து வந்த நிலையில், இந்த சரிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu