இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சர்வரில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, வங்கி சேவைகள் பாதிப்படைந்தன. வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாமல் அவதியுற்றனர்.
நேற்றைய தினத்தில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சமயத்தில், பண பரிவர்த்தனை மேற்கொள்வது, ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது, பாரத ஸ்டேட் வங்கியின் செயலி மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது, உள்ளிட்ட பல்வேறு சேவைகள் திடீரென தடைபட்டன. பாரத ஸ்டேட் வங்கி சார்பில், “சிறிது நேரத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு நீடித்தது. தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியால் கோளாறு சரி செய்யப்பட்டு செயல்பாடுகள் தொடங்கியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.