கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாரத ஸ்டேட் வங்கியின் இணைய வர்த்தக தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிப்படைந்தது. தற்போது மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஸ்பிஐ வங்கியின் சர்வர்கள் முடக்கப்பட்டுள்ளன. நேற்று இந்த பாதிப்புகள் வெகுவாக உணரப்பட்டன. ஆனால், தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு, வங்கி செயல்பாடுகள் வழக்கம் போல் நடக்கத் துவங்கியுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நேற்று, சில மணி நேரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இணைய வங்கி செயல்பாடுகள், யுபிஐ பரிவர்த்தனைகள், கார்ட் பேமென்ட் மற்றும் மொபைல் செயலி ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கி இருந்தன. இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்காக பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு குறித்த விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் பொறுமைக்கு நன்றி தெரிவித்துள்ளது.