இஸ்ரேலில் அரசுக்கு எதிராக மக்கள் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
காசாவில் 36,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். தற்போது ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இஸ்ரேல் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தண்ணீரை பீச்சி மக்களை கலைக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் காசா போரை இஸ்ரேல் அரசு கையாண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். அதோடு பணைய கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.