தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 119 தொகுதிகளை கொண்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 10ஆம் தேதி வரை மனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசீலனை 13ம் தேதி நடைபெற உள்ளது. மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி ஆக உள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் 4 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடவடிக்கை விறுவிறுப்படைய தொடங்கி உள்ளது.