தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெலுங்கானாவிற்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 55 இடங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமீதி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல்களை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பாஜக 52 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தேர்தலுக்காக 45 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது இவர் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மோராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு 2009 முதல் 2019 வரை எம்பி யாக பதவி வகித்து உள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














