தெலுங்கானாவில் 9 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்தார் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ்.
தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது நிறுவ வேண்டும் என்ற அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, தெலுங்கானா முதல்வர் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். காமரெட்டி, கரீம்நகர், கம்மம், கும்ரம் பீம் ஆசிபாபாத், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, ஜங்கான், நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் விகாராபாத் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.













