கனடாவில் தெலுங்கானா மாணவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் மூழ்கி பலியானார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், மீர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரணீத், 2019-ல் கனடா சென்று, அங்கு முதுநிலை பட்டப்படிப்பை சமீபத்தில் முடித்தார். பின்னர், கனடாவில் வேலை தேடிக்கொண்டிருந்தார். 2022-ல், அவருடைய அண்ணன் கனடாவுக்கு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை, பிரணீத் மற்றும் அவரது அண்ணன், நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரியில் பிறந்த நாளைக் கொண்டாட சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் ஏரியில் நீந்தி மகிழ்ந்த பிறகு, கரையில் வந்தனர். ஆனால் பிரணீத் கரை திரும்பவில்லை. அதன்பின் மீட்பு குழு பிரணீத்தை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்தது. இதையடுத்து குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது பெற்றோர் பிரணீத் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.