டாடா பிளே நிறுவனத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான டெமாசெக் பங்குதாரராக உள்ளது. இந்த நிலையில், டெமாசெக் வசம் இருந்த 10% டாடா பிளே பங்குகளை டாடா சன்ஸ் கையகப்படுத்தி உள்ளது. அதன்படி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் டாடா பிளே பங்கு பங்களிப்பு 70% ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்கள், அதாவது 835 கோடி ரூபாய் மதிப்புடைய டாடா பிளே பங்குகள் டாடா சன்ஸ் வசம் சென்றுள்ளது.
கொரோனாவுக்கு முன்னதாக, டாடா பிளே நிறுவனத்தின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் அளவில் இருந்தது. இது, தற்போது 1 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. இந்த சூழலில், பங்கு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெமாசெக் டாடா பிளேவில் இருந்து வெளியேறியதால், 70:30 கூட்டணியில் டாடா மற்றும் வால்ட் டிஸ்னி குழுமங்கள் டாடா பிளே பங்கு பங்களிப்பை பெறுகின்றன.














