இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலை வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தென் தமிழக உள் மாவட்டங்கள், வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட நிலை காணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோன்று இன்று மற்றும் நாளை குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது.