தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு இடங்களில் அசவுகரிய சூழ்நிலை ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச வெப்பநிலை 33-35 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது














