தமிழகத்தின் வெப்பநிலை மீண்டும் படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை கோடை வெப்பம் சுட்டு எடுத்தது ஆரம்பத்தில் ஒரு இடங்களில் பெய்த மழை பின்னர் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. அதிலும் தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் என அனைத்து இடங்களும் மிதமான மழையும், கனமழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக கேரள கடற்கரை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை மழையின் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது