தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20, 21 மற்றும் 22ம் தேதிகளில் வெப்பநிலை 2-3°C உயரக்கூடும். 23, 24ம் தேதிகளில் சில இடங்களில் 2-4°C அதிகமாகும். 25, 26ம் தேதிகளிலும் வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்புள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20, 21ம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33°C, குறைந்தபட்சம் 22-23°C இருக்கும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.