துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சகம் 

ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஸ்ரீநகர், யூனியன் பிரதேசம் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் […]

ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், யூனியன் பிரதேசம் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எஞ்சிய 1 பயணியை தேடும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. . மே 4-ம் தேதி விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சம்பவத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறிந்து முன்னெச்சரிக்கை சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை ALH Dhruv ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை பாதுகாப்புப் படைகள் நிறுத்தி வைத்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu