அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். "சிண்டிகேட் முடிவுகள் வரை, தற்போதைய தேர்வு கட்டணமே நடைமுறையில் இருக்கும். மாணவர்களை பாதிக்கக்கூடிய நிலையை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.