கனமழைக்கு வாய்ப்புள்ள பத்து மாவட்டங்கள்

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 07, 08 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் […]

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 07, 08 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் கன மழை வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் சில மாவட்டங்கள், திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்கு வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu