மிசோராமில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
வங்கதேச எல்லையில் கரையை கடந்த ரீமால் புயலால் தெலுங்கானா தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதிக கன மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அங்குள்ள கல் குவாரியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது














