ஸ்மார்ட் மின் மீட்டர் டெண்டர் ரத்து - விரைவில் புதிய டெண்டர்

வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும் தென்மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கு […]

வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும் தென்மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கு பெண்டர் ஏற்படுத்தி இருந்தது.

மேலும் ரூபாய் 10 ஆயிரத்து 790 கோடியில் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த டெண்டரை முடிக்க கால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி சென்னை தியாகராய தொகுதியில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது.

இந்த டெண்டர் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டராக இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மின்வாரியத்தின் பல நிபந்தனைகளில் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால் டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல நிறுவனங்கள் முன்வராத காரணத்தினால் பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு புதிய டெண்டரை விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu