தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரி உள்ளது.
தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றார்கள். இங்கு ஏழை மக்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை ரேஷன் கடைகளில் கிடைக்கவில்லை. எனவே இதனை சரி செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த டெண்டருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க 27 ஆம் தேதி கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் விரைவாக இந்த சேவையினை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.














